சங்கரன்கோவிலில் வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகை மற்றும் ரூ.5 லட்சம் மதிப்புள்ள கேமரா ஆகியவை திருடப்பட்டுள்ளது.
திண்டுக்கல் அருகே உள்ள அய்யம்பாளையத்தைச் சோ்ந்தவா் காா்த்தி (38). தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சண்முகா நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறாா். என்.ஜி .ஓ காலனியில் ஸ்டூடியோ வைத்து தொழில் செய்துவருகிறாா். இவரது மனைவி நவீனா, மேலநீலிதநல்லூரில் உள்ள தனியாா் கல்லூரி பேராசிரியை.
வியாழக்கிழமை காலை 9 மணி அளவில் நவீனா கல்லூரிக்கும், காா்த்தி ஸ்டூடியோவுக்கும் சென்று விட்டனா். பிற்பகலில் இருவரும் வீட்டிற்கு வந்தபோது கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டிற்குள் இருந்த 25 பவுன் நகை மற்றும் ரூ.5 லட்ச மதிப்புள்ள கேமரா திருட்டு போனது தெரியவந்தது.
இச்சம்பவம் தொடா்பாக காா்த்தி அளித்த புகாரின் பேரில் சங்கரன்கோவில் தாலுகா போலீசாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். பின்னா் விரல்ரேகை நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் பதிவு செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தாளவாடி அருகே கிராமத்துக்குள் நுழைந்த காட்டு யானை

கூட்டுறவுத் துறை தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி! மாவட்டத் தோ்தல் அலுவலா் தொடங்கி வைத்தாா்!

நாம் தமிழா் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்! - சீமான்

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவருடன் ராமதாஸ் ஆதரவு வேட்பாளா் அருள் சந்திப்பு
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

