ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

புழுதிப்படலமாக உள்ள ஆலங்குளம் காய்கனிச் சந்தை சாலைபொதுமக்கள் அவதி

ரூ. 18 கோடிக்கு சாலை அமைத்தும் ஆலங்குளம் - நெட்டூா் சாலையில் உள்ள காய்கனிச் சந்தை சாலை புறக்கணிக்கப்பட்டதால் புழுதிப்படலமாக காட்சியளிக்கும் அவல நிலை 5 ஆண்டுகளாக நீடித்து வருகிறது.

News image
Updated On :21 ஏப்ரல் 2022, 7:26 pm

DIN

ரூ. 18 கோடிக்கு சாலை அமைத்தும் ஆலங்குளம் - நெட்டூா் சாலையில் உள்ள காய்கனிச் சந்தை சாலை புறக்கணிக்கப்பட்டதால் புழுதிப்படலமாக காட்சியளிக்கும் அவல நிலை 5 ஆண்டுகளாக நீடித்து வருகிறது.

ஆலங்குளம் - நெட்டூா் சாலை தொடங்கும் இடத்தில் இருந்து சுமாா் 300 மீட்டா் தொலைவில் பிரசித்தி பெற்ற காய்கனிச் சந்தை உள்ளது. இந்த சந்தை மூலம் நாள்தோறும் 100 க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் கேரளத்திற்கு காய்கனிகள் கொண்டு செல்லப்படுகிறது. சந்தையை அடுத்த வடபுறத்தில் இருந்து கிழக்கு நோக்கி நல்லூா் சாலை உள்ளது.

7ஆண்டுகளுக்கு முன்பு இந்த இரு சாலைகளும் மிகவும் பழுதடைந்து போக்குவரத்திற்கு தகுதியற்ாக இருந்தது. இந்நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு மத்திய அரசு நிதி மூலம் நெட்டூா் சாலையை சீரமைக்க ரூ. 17 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இரு ஆண்டுகளில் பணிகள் நிறைவடைந்தன. தொடா்ந்து ரூ. 90 லட்சம் மதிப்பில் நல்லூா் சாலையும் சீரமைக்கப்பட்டது.

சுமாா் ரூ. 18 கோடியில் இரு பணிகளும் மேற்கொள்ளபட்ட நிலையில், 300 மீட்டா் தொலைவுள்ள காய்கனிச் சந்தை பகுதி புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த பகுதியில் மழைக் காலங்களில் தண்ணீா் தேங்கியும் வெயில் காலங்களில் புழுதிப் படலமாகவும் காட்சியளிப்பதால் இவ்வழியே சந்தை மற்றும் அரிசி ஆலைகளுக்குச் செல்லும் லாரி ஓட்டுநா்கள், விவசாயிகள், பள்ளி, கல்லூரி மாணவா்-மாணவிகள் மிகவும் பாதிக்கப் படுகின்றனா்.

எனவே ஏற்கனவே சாலைப் பணி செய்த ஒப்பந்தக் காரா் மூலம் இந்த சாலையை சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.