

ஆலங்குளம்: உலக புத்தக தினத்தையொட்டி ஆலங்குளத்தில் புத்தக கண்காட்சி சனிக்கிழமை தொடங்கியது.
ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாக கூட்ட அரங்கில் அமைக்கப்பட்டுள்ள இந்த புத்தக கண்காட்சியை தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பொ. சிவபத்மநாதன் தலைமை வகித்துத் திறந்து வைத்தார்.
இதைத் தொடர்ந்து அவர் முதல் விற்பனையைத் தொடக்கி வைத்தார். முதல் விற்பனையை ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் திவ்யா மணிகண்டன் பெற்றுக் கொண்டார்.
ஆலங்குளம் பேரூராட்சித் தலைவர் சுதா மோகன்லால், நகர திமுக செயலர் நெல்சன், ஆலங்குளம் அரசு மகளிர் கல்லூரி துணை முதல்வர் சண்முக சுந்தரராஜ் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். சனிக்கிழமை தொடங்கிய இந்த கண்காட்சி வரும் மே 1 வரை நடைபெறுகிறது.
மாவட்ட திமுக பொறுப்பாளர் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் ஆலங்குளம் நூலகத்தில் புதிய புரவலராக தங்களை இணைத்துக் கொண்டனர். வட்டார நூலகர் பழனீஸ்வரன் வரவேற்றார். வாசகர் வட்டத் தலைவர் தங்கசெல்வம் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.