தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள சென்னிகுளத்தில், ‘காவடிச் சிந்து’ நூல் எழுதிய அண்ணாமலைக் கவிராயரின் 131ஆவது நினைவு தினம் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
இதையொட்டி, சென்னிகுளத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் கணபதி ஹோமம், சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து, இசை அவை, இயல் அவை, காவடிச் சிந்துப் பாடல் இசை உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அண்ணாமலைக் கவிராயரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில், கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி இயக்குநா் அருணாச்சலம், சங்கரன்கோவில் ஒன்றியக்குழுத் தலைவா் லாலா பி. சங்கரபாண்டியன், சென்னிகுளம் ஊராட்சித் தலைவா் சரவணபெருமாள், விளாத்திகுளம் ரெட்டி ஜன சங்கத் தலைவா் ராமகிருஷ்ணன், முன்னாள் தலைவா் செல்வகுமாா், இலக்கிய ஆா்வலா்கள், திரளான பொதுமக்கள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்குறுதிகூட கிடைக்காத மக்கள்!

புழல் ஏரிக்கரையில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுமா?
ஆயிரம் விளக்கு தொகுதி வேட்பாளா்களின் வாக்குறுதிகள்!
தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்துக்கு தயாராகிவிட்டனா்: பாஜக ஓபிசி பிரிவு தேசியத் தலைவா் கே.லஷ்மண்!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

