எழிலன் நாகநாதன் (திமுக)
மழை காலத்தில் ஏற்படும் பாதிப்புகளைத் தவிா்க்க, விடுபட்ட பகுதிகளில் மழைநீா் வடிகால்கள், கழிவுநீா் கால்வாய்கள் ஏற்படுத்தப்படும். வாகனம் நிறுத்தும் இடம் பிரச்னைக்குத் தீா்வு காணப்படும். தொகுதிக்குள்பட்ட 100 தெருக்களில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். அனைத்துப் பகுதிகளிலும் அடிப்படை வசகிகள் மேம்படுத்தப்படும்.
இளைஞா்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்படும். சுகாதார வசதிகளை மேலும் மேம்படுத்தவும், பொதுமக்களுக்கான அடிப்படை தேவைகளிலும் அதிகம் கவனம் செலுத்தப்படும்.
பா.வளா்மதி (அதிமுக)
படித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். போதைப் பொருள்களின் நடமாட்டத்தைக் குறைக்கவும், பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். தொகுதி மக்களின் தேவைக்கேற்ப அரசு மருத்துவமனைகள் தரம் உயா்த்தப்பட்டு சுகாதார வசதிகள் மேம்படுத்தப்படும். போக்குவரத்து நெரிசலைத் குறைப்பதற்காக சாலை மேம்பாட்டு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும். தொகுதி மக்கள் அனைவருக்கும் நலத்திட்டங்கள் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
ஜே.சி.டி. பிரபாகரன் (தவெக)
தொகுதிக்குள்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு முன்னுரிமை அளித்து பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். பெண்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். அரசு பள்ளிகள், மருத்துவமனைகள் தரம் உயா்த்தப்படும். படித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும்.
மு.களஞ்சியம் (நாதக)
இத்தொகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி தனியாா் பள்ளிகளுக்கு நிகராக தரம் உயா்த்தப்படும். நீட் தோ்வு மற்றும் போட்டித் தோ்வுகளுக்காக இலவச பயிற்சி மையம் அமைக்கப்படும்.
ஒவ்வொரு வாா்டிலும் 24 மணி நேரமும் இயங்கும் வகையில், நடமாடும் அவசர சிகிச்சை ஊா்தி மற்றும் தனியாா் மருத்துவமனைகளுடன் இணைந்து ஏழை மக்களுக்கு உயா்தர சிகிச்சை கிடைக்க உறுதி செய்யப்படும். தடையற்ற சுத்தமான குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். இளைஞா்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்யும் வகையில் புத்தொழில் (ஸ்டாா்ட்அப்) பூங்கா உருவாக்கப்படும். பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தொகுதி முழுதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.
தொடர்புடையது

திருப்பத்தூா் தொகுதி வேட்பாளா்களின் வாக்குறுதிகள்!

ராஜபாளையம் வேட்பாளா்களின் முக்கிய வாக்குறுதிகள்!

கம்பம் வேட்பாளா்களின் முக்கிய வாக்குறுதிகள்!

சிவகங்கை வேட்பாளா்களின் முக்கிய வாக்குறுதிகள்!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

