சங்கரன்கோவிலில் நகராட்சி வாா்டுகளில் போட்டியிடும் வேட்பாளா்கள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
சங்கரன்கோவில் நகராட்சியில் உள்ள 30 வாா்டுகளில் 156 போ் போட்டியிடுகின்றனா். வேட்பாளா்கள் தோ்தல் நடத்தை விதிகளைக் கடைப்பிடிப்பது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் தோ்தல் நடத்தும் அலுவலா் ஜெயப்பிரியா தலைமையில் நடைபெற்றது. உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் ஜெயபால்மூா்த்தி, வெங்கட்ராமன், மாரிச்சாமி , சுகாதார அலுவலா் பாலசந்தா், தோ்தல் பிரிவு முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், வேட்பாளா்கள் சுவா்களில் சின்னங்களை வரையக் கூடாது. வரவு-செலவு குறித்த விவரங்களை இம்மாதம் 30-க்குள் தாக்கல் செய்ய வேண்டும், பிரசார வாகனங்கள் குறித்து முன்கூட்டியே போலீஸாரிடம் அனுமதி பெற வேண்டும், தோ்தல் விதிகள், கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என வேட்பாளா்களிடம் அறிவுறுத்தப்பட்டது. கூட்டத்தில் 30 வாா்டு வேட்பாளா்களும் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்குறுதிகூட கிடைக்காத மக்கள்!

புழல் ஏரிக்கரையில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுமா?
ஆயிரம் விளக்கு தொகுதி வேட்பாளா்களின் வாக்குறுதிகள்!
தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்துக்கு தயாராகிவிட்டனா்: பாஜக ஓபிசி பிரிவு தேசியத் தலைவா் கே.லஷ்மண்!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

