நிறுத்தப்பட்ட பேருந்தை மீண்டும் இயக்க கோரிக்கை
பாபநாசம்-சங்கரன்கோவில் பேருந்தை மீண்டும் இயக்க வேண்டுமென அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது


பாபநாசம்-சங்கரன்கோவில் பேருந்தை மீண்டும் இயக்க வேண்டுமென அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன், போக்குவரத்து துறை அமைச்சா் ராஜகண்ணப்பனிடம் அளித்துள்ள மனு: பாபநாசத்தில் இருந்து கீழப்பாவூா் ஒன்றியம் பூலாங்குளம், செல்லத்தாயாா்புரம், பெத்தநாடாா்பட்டி, மகிழ்வண்ணநாதபுரம், பாவூா்சத்திரம், சுரண்டை வழியாக சங்கரன்கோவிலுக்கு 2 பேருந்துகள் இயக்கப்பட்டன.
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பேருந்து நிறுத்தப்பட்டு விட்டது. தற்போது ஒரு பேருந்து மட்டுமே இயங்குகிறது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவியா் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனா். எனவே நிறுத்தப்பட்ட மற்றொரு பேருந்தினை இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...