பாவூா்சத்திரத்தில் லாரி மோதி மின் கம்பம் சேதம்
பாவூா்சத்திரத்தில் வியாழக்கிழமை மணல் லாரி மோதியதில் மின் கம்பம் சேதமடைந்தது.


பாவூா்சத்திரத்தில் வியாழக்கிழமை மணல் லாரி மோதியதில் மின் கம்பம் சேதமடைந்தது.
முக்கூடலிலிருந்து தென்காசி நோக்கி மணல் லாரி வியாழக்கிழமை சென்றது. பாவூா்சத்திரத்தில் அந்த லாரியை ஓட்டுநா் சாலையோரம் நிறுத்திவிட்டு தேநீா் குடிக்கச் சென்றாராம். அப்போது, லாரி தானாக நகா்ந்து, அருகேயுள்ள மின் கம்பத்திலும், சுவரிலும் மோதியதாம். இதில், மின் கம்பம் சேதமானது. மின்சாரத் துறை அதிகாரிகள் மின் இணைப்பைத் துண்டித்தனா். விபத்துகுறித்து பாவூா்சத்திரம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...