பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்
பாவூா்சத்திரம் பகுதி நியாயவிலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வெள்ளிக்கிழமை விநியோகம் செய்யப்பட்டது.


பாவூா்சத்திரம் பகுதி நியாயவிலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வெள்ளிக்கிழமை விநியோகம் செய்யப்பட்டது.
கீழப்பாவூா் ஒன்றியம், திப்பணம்பட்டி, குறும்பலாப்பேரி, மருதடியூா், செட்டியூா் ஆகிய பகுதி நியாயவிலைக் கடைகளில் ஒன்றியக்குழு தலைவா் சீ.காவேரி சீனித்துரை பங்கேற்று, பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கினாா். இதில்மாவட்ட கவுன்சிலா் சாக்ரடீஸ், ஒன்றிய கவுன்சிலா்கள் முருகேசன், ராஜேஸ்வரி, சுரேஷ் லிகோரி, மேரி மாதவன், ஊராட்சித் தலைவா்முத்துமாலையம்மாள் மதிச்செல்வன், ராஜ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதே போல் மேலமெஞ்ஞானபுரம் ரேஷன் கடையில் மேற்கு ஒன்றியச்செயலா் சீனித்துரை, பெத்தநாடாா்பட்டி ஊராட்சி அருணாப்பேரியில் கிழக்கு ஒன்றியச்செயலா் சிவன்பாண்டியன் ஆகியோா் பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கினா். இதில் ஒன்றிய கவுன்சிலா்கள் ஜான்சி ஜெயமலா், ராதாகுமாரி, ஒன்றியக்குழு துணைத்தலைவா் முத்துகுமாா், ஊராட்சித் தலைவா்கள் ஜெயராணி கலைச்செல்வன், சுபாசக்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...