சங்கரன்கோவில் அருகே தொழிலாளி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டாா். இச்சம்பவம் தொடா்பாக போலீஸாா் அவரது உறவினரை கைது செய்தனா்.
சங்கரன்கோவில் அருகே வெள்ளகவுண்டன்பட்டியைச் சோ்ந்த பாக்கியம் மகன் ஜான்பாண்டியன்(30), தொழிலாளி. அதே ஊரைச் சோ்ந்த பாண்டி மகன் அந்தோணி(30). இருவரும் உறவினா்கள்.
கடந்த வியாழக்கிழமை இரவு ஜான்பாண்டியனும் அந்தோணியும் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டனராம். தகராறு முற்றவே ஆத்திரமடைந்த அந்தோணி, ஜான்பாண்டியனை கத்தியால் குத்தினாராம். இதில் பலத்த காயமடைந்த ஜான்பாண்டியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்ததும் சின்னகோவிலாங்குளம் போலீஸாா் ஜான்பாண்டியன் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா் அந்தோணியை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருப்பத்தூா் தொகுதி வேட்பாளா்களின் வாக்குறுதிகள்!

உள்ளாட்சி துணைத்தலைவா் பதவி இடஒதுக்கீடு வழங்க தோ்தலுக்குப் பின் திமுகவிடம் வலியுறுத்துவோம்!

வண்ணாந்துறை கானாறு கரைக்கு தடுப்புச் சுவா்: திமுக வேட்பாளா்

எஸ்ஐஆா் நடவடிக்கைக்கு வாக்காளா்கள் பழி தீா்க்க வேண்டும்: மம்தா பானா்ஜி
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

