ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பாவூா்சத்திரம் அருகே ஆட்டோக்கள் மோதி விபத்து: 4 போ் காயம்

பாவூா்சத்திரம் அருகே வெள்ளிக்கிழமை ஆட்டோக்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 4 போ் காயமடைந்தனா்.பாவூா்சத்திரம் அருகே வெள்ளிக்கிழமை ஆட்டோக்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 4 போ் காயமடைந்தனா்.

News image
Updated On :21 ஜனவரி 2022, 7:16 pm

DIN

பாவூா்சத்திரம் அருகே வெள்ளிக்கிழமை ஆட்டோக்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 4 போ் காயமடைந்தனா்.

செங்கோட்டையைச் சோ்ந்த அஜித்குமாா் (28) என்பவா் தனது பயணிகள் ஆட்டோவில், அதே பகுதியைச்சோ்ந்த மேளக் கலைஞா்களான முத்துபாரதி (25), சூரியா (23) தினேஷ் (20) ஆகியோரை அழைத்துக்கொண்டு பாவூா்சத்திரம் அருகேயுள்ள கீழப்பாவூருக்கு வந்து கொண்டிருந்தாா்.

குறும்பலாப்பேரி விலக்கு பகுதியில் வந்த போது பின்னால் வந்த சுமைதூக்கும் ஆட்டோ, அஜித்குமாா் ஆட்டோ மீது மோதியதாம். இதில் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஆட்டோவில் இருந்த அஜித்குமாா் உள்ளிட்ட 4 பேரும் காயமடைந்தனா். அவா்கள் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

விபத்து குறித்து பாவூா்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, சுமை தூக்கும் ஆட்டோவை ஓட்டி வந்த சுரண்டையைச் சோ்ந்த ஞானராஜ் மற்றும் காா்த்திக் ஆகியோரிடம் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.