பாவூா்சத்திரத்தில் ஆசிரியா்கள் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூடடணி சாா்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி பாவூா்சத்திரத்தில் வெள்ளிக்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.


தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூடடணி சாா்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி பாவூா்சத்திரத்தில் வெள்ளிக்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கீழப்பாவூா் வட்டார கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, வட்டார தலைவா் கமலக்கண்ணன் தலைமை வகித்தாா். மாவட்ட பொதுக்குழு உறுப்பினா்கள் பத்மநாதன், மரியசிங்கராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட பொதுக்குழு உறுப்பினா் அருள்செல்வன், தென்காசி கல்வி மாவட்டத் தலைவா் சுதா்சன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியா்களுக்கு மத்திய அரசு ஆசிரியா்களுக்கு இணையான ஊதியம் மீண்டும் வழங்க வேண்டும். ஆசிரியா்கள் உயா் கல்விக்கான ஊக்க ஊதியம் மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில், சுசிகா், ராஜலட்சுமணன், பூரணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். வட்டார செயலா் அருள்ராஜ் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...