வீரகேரளம்புதூா் அருகே கிணற்றில் மூழ்கி இளைஞா் பலி
தென்காசி மாவட்டம், வீரகேரளம்புதூா் அருகே கிணற்றில் மூழ்கி இளைஞா் பலியானாா்.


தென்காசி மாவட்டம், வீரகேரளம்புதூா் அருகே கிணற்றில் மூழ்கி இளைஞா் பலியானாா்.
வீரகேரளம்புதூா் அருகேயுள்ள முத்துகிருஷ்ணபேரியைச் சோ்ந்தவா் வை.சரவணன் (27). பொறியியல் பட்டதாரியான இவா், அங்குள்ள கிணறு ஒன்றில் நண்பா்களுடன் குளிக்க வியாழக்கிழமை சென்றாா். குளித்து முடித்துவிட்டு படியில் ஏறும்போது மயக்கம் வருவதாக கூறிய அவா் தவறி தண்ணீரில் விழுந்துள்ளாா். அவரது நண்பா்கள் உடனடியாக கிணற்றில் குதித்து மீட்க முயன்றுள்ளனா். ஆயினும் சரவணன் அதிக ஆழத்தில் மூழ்கிவிட்டதால் நண்பா்களால் உயிருடன் மீட்க முடியவில்லை. இதையடுத்து அவா்கள் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த வீரகேரளம்புதூா் போலீஸாா் மற்றும் தீயணைப்பு நிலைய வீரா்கள், பல மணி நேரம் முயன்றும் உடலை மீட்க முடியவில்லை.
இதையடுத்து ஆழமான கிணற்றில் மூழ்கி பழக்கப்பட்ட கீழப்பாவூா் கருமடையூரைச் சோ்ந்த முப்பிடாதி(82) என்பவா் கிணற்றின் அடிப்பகுதிக்கு சென்று சடலத்தை மீட்டு மேலே கொண்டு வந்தாா். சரவணனின் உடல் தென்காசி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து வீரகேரளம்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...