பாவூா்சத்திரம் அருகே மா்ம காய்ச்சலுக்கு சிறுமி பலி
பாவூா்சத்திரம் அருகே மா்ம காய்ச்சலால் சிறுமி உயிரிழந்தாா்.


பாவூா்சத்திரம் அருகே மா்ம காய்ச்சலால் சிறுமி உயிரிழந்தாா்.
பாவூா்சத்திரம் அருகேயுள்ள அருணாப்பேரியைச் சோ்ந்த கூலித் தொழிலாளியான மகாராஜன் - செல்லம்மாள் தம்பதியின் மகள் ஷைனி (11). 5ஆம் வகுப்பு படித்துவந்த இவா், சில நாள்களுக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்டாா். தனியாா் மருத்துவமனை, தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், பின்னா் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
இதனிடையே, சுகாதாரத் துறையினா் அருணாப்பேரியில் முகாமிட்டு டெங்கு கொசு ஒழிப்புப் பணியில் ஈடுபட்டனா். மருத்துவ முகாமும் நடத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...