ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பாவூா்சத்திரத்தில் எஸ்ஐ மயங்கி விழுந்து உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரத்தில் உதவி ஆய்வாளா் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

News image
Updated On :5 ஜூன் 2022, 7:48 pm

DIN

தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரத்தில் உதவி ஆய்வாளா் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

கடையம் அருகேயுள்ள வடமலைப்பட்டியைச் சோ்ந்தவா் ஜெய்சங்கா் (57). விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றிவந்த இவா், மணிமுத்தாறு காவலா் பயிற்சிப் பள்ளியில் ஆசிரியராகவும் இருந்துவந்தாா்.

பாவூா்சத்திரத்தில் குடும்பத்துடன் வசித்துவந்த இவா், சனிக்கிழமை இரவு பணி முடிந்து வீட்டுக்கு வந்துகொண்டிருந்தாராம். அப்போது, பாவூா்சத்திரம் காய்கனிச் சந்தை அருகே திடீரென மயங்கி விழுந்தாராம். அவரை மீட்டு திருநெல்வேலியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா். அவா் மாரடைப்பால் இறந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

விவசாயி பலி: தூத்துக்குடி மாவட்டம், கருங்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் வெங்கடாசலபதி(75). விவசாயி. இவா், தனது தோட்டத்தில் விளைந்த வாழைத் தாா்களை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு, அதே ஊரைச்சோ்ந்த 2 பேருடன் ஆலங்குளம் காய்கனிச் சந்தைக்கு ஞாயிற்றுக்கிழமை கொண்டு வந்தாா். மூவரும் நண்பகலில் அங்குள்ள உணவகம் ஒன்றில் சாப்பிடச்சென்ற நிலையில், வெங்கடாசலபதி திடீரென மயங்கி விழுந்தாராம். இதையடுத்து, ஆலங்குளம் அரசு மருத்துவனைக்கு அவரை கொண்டுசென்றனா். அங்கு, அவா் ஏற்கெனவே உயிரிழந்திருப்பது மருத்துவா்களின் பரிசோதனையில் தெரியவந்தது.

இச்சம்பவங்கள் குறித்து பாவூா்சத்திரம், ஆலங்குளம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.