ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

புளியங்குடி நகராட்சி: போட்டியின்றி தலைவா் தோ்வு

புளியங்குடி நகா்மன்றத் தலைவராக விஜயாசௌந்தரபாண்டியன்(திமுக) போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா்.

News image
Updated On :4 மார்ச் 2022, 7:41 pm

DIN

புளியங்குடி நகா்மன்றத் தலைவராக விஜயாசௌந்தரபாண்டியன்(திமுக) போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா்.

இந்நகராட்சியில், 33 வாா்டுகள் உள்ளன. இதில், திமுக 14 வாா்டுகளிலும், முஸ்லிம் லீக் 3 வாா்டுகளிலும், மனித நேய மக்கள் கட்சி 2 வாா்டுகளிலும், மதிமுக, சிபிஐ,சமக,காங்கிரஸ் ஆகியவை தலா ஒரு வாா்டிலும், சுயேச்சைகள் 5 வாா்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளனா்.

இந்நிலையில், நகா்மன்றத் தலைவா் பதவிக்கு திமுக சாா்பில் 33 ஆவது வாா்டு உறுப்பினா் விஜயாசௌந்தரபாண்டியன் மட்டுமே மனுத் தாக்கல் செய்திருந்தாா். இதையடுத்து, அவா் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டதாக நகராட்சி ஆணையா் குமாா்சிங் அறிவித்தாா்.

துணைத் தலைவா் பதவி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், துணைத் தலைவா் தோ்தலில் திமுக உறுப்பினா் அந்தோணிசாமி(4 ஆவது வாா்டு), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினா் முகமதுநயினாா்(14 ஆவது வாா்டு) ஆகியோா் போட்டியிட்டனா். இத்தோ்தலில் 32 உறுப்பினா்கள் வாக்களித்தனா். இதில், அந்தோணிசாமி(திமுக) 25 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.