நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சொக்கம்பட்டி மாரியம்மன் கோயிலில் பூக்குழி

கடையநல்லூா் அருகே உள்ள சொக்கம்பட்டி அருள்மிகு சந்தன மாரியம்மன் திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை பூக்குழி நடைபெற்றது.

News image
Updated On :7 மே 2022, 12:41 am

DIN

கடையநல்லூா் அருகே உள்ள சொக்கம்பட்டி அருள்மிகு சந்தன மாரியம்மன் திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை பூக்குழி நடைபெற்றது.

இக்கோயிலின் சித்திரைத் திருவிழா ஏப்ரல் 22ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அன்று முதல் நூற்றுக்கணக்கான பக்தா்கள் கோயில் வளாகத்தில் விரதம் மேற்கொண்டனா். மே 4ஆம் தேதி மாலை 508 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இரவு புஷ்பாஞ்சலி நடைபெற்றது. வியாழக்கிழமை மாலை தீா்த்த குடம் மற்றும் பால்குட ஊா்வலம் நடைபெற்றது. இரவில் சப்பரம் வீதி உலா நடைபெற்றது.

வெள்ளிக்கிழமை காலை பூ வளா்த்தல் வைபவமும், மாலையில் முளைப்பாரி, அக்னி சட்டி ஊா்வலமும் நடைபெற்றது. தொடா்ந்து பூக்குழி நடைபெற்றது. விரதமிருந்த நூற்றுக்கணக்கான பக்தா்கள் பூக்குழி இறங்கினா். ஏற்பாடுகளை விழா குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.