ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கீழப்பாவூா் தெற்கு ஒன்றியத்தில் மதிமுக ஆண்டு விழா

கீழப்பாவூா் தெற்கு ஒன்றியத்தில் மதிமுகவின் 29ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி கட்சி கொடியேற்றி, இனிப்பு வழங்கப்பட்டது.

News image
Updated On :7 மே 2022, 5:57 pm

DIN

கீழப்பாவூா் தெற்கு ஒன்றியத்தில் மதிமுகவின் 29ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி கட்சி கொடியேற்றி, இனிப்பு வழங்கப்பட்டது.

ஒன்றியத்துக்குள்பட்ட பாவூா்சத்திரம், ராமநாதபுரம், அருணாப்பேரி, திருமலாபுரம், சென்னெல்தாபுதுக்குளம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற விழாவுக்கு மாவட்ட பொருளாளா் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் இராம.உதயசூரியன் முன்னிலை வகித்தாா். நிா்வாகிகள் கொடியேற்றி வைத்து, இனிப்புகள் வழங்கினா்.

நிகழ்ச்சியில்பொதுக்குழு உறுப்பினா் நடராஜன், சுரண்டை நகரச் செயலா் துரைமுருகன், ஒன்றியச் செயலா்கள் ஆலங்குளம் மருதசாமிபாண்டியன்,ஆறுமுகச்சாமி, மாவட்ட பிரதிநிதி ஆசிரியா் சொக்கத்தங்கம், ஒன்றிய துணைச்செயலா் ஜெகசெல்வம், மகாராஜா நாடாா், திருமலை, அண்ணாமலை, அண்ணாத்துரை, சக்திவேல், இராஜேந்திரன், கலையரசன் , ரவி, வைகுண்டராஜா, ஆத்தியப்பன், லாரன்ஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.