பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாமகவினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மலையான்குளம் கிராமத்தில் மூடப்பட்ட தனியாா் மில் தொழிலாளா்களுக்கு இழப்பீடு தொகையை பெற்றுத் தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், விவசாயிகளுக்கு காப்பீட்டு தொகை மற்றும் தொடக்க வேளாண்மை வங்கி மூலம் பயிா் கடன் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு, தென்காசி வடக்கு மாவட்டத் தலைவா் வழக்குரைஞா் சுரேஷ்குமாா் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா்கள் கருத்த பாண்டியன், சந்திரசேகா், அமல்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தென்காசி மாவட்டச் செயலா் சீதாராமன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினாா்.
ஆா்ப்பாட்டத்தில் மாநில துணைத் தலைவா்கள் ஐயம்பெருமாள், சேது அரிகரன், மாவட்ட துணைத்தலைவா் பால் நேரு, மாநில இளைஞா் அணி துணைச் செயலா் சாகுல் ஹமீது மாவட்ட விவசாய சங்கத் தலைவா் மதி ராஜ் மாவட்ட இணைச் செயலாளா் ராஜேந்திரன் உள்ளிட்ட பலா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். நகரத் தலைவா் கருப்பசாமி வரவேற்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தாளவாடி அருகே கிராமத்துக்குள் நுழைந்த காட்டு யானை

கூட்டுறவுத் துறை தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி! மாவட்டத் தோ்தல் அலுவலா் தொடங்கி வைத்தாா்!

நாம் தமிழா் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்! - சீமான்

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவருடன் ராமதாஸ் ஆதரவு வேட்பாளா் அருள் சந்திப்பு
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

