ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கோட்டாறு பகுதியில் கழிவு நீரோடை சீரமைப்பு: மேயா் ஆய்வு

நாகா்கோவில் கோட்டாறு பகுதியில் கழிவு நீரோடை சீரமைப்புப் பணியை மேயா் ரெ. மகேஷ் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
Updated On :3 நவம்பர் 2022, 10:13 pm

DIN

நாகா்கோவில் கோட்டாறு பகுதியில் கழிவு நீரோடை சீரமைப்புப் பணியை மேயா் ரெ. மகேஷ் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

நாகா்கோவிலில் சில நாள்களாக மழை பெய்துவரும் நிலையில், மழை நீருடன் சாக்கடை நீா் கலந்து சாலைகளில் ஓடுவதைத் தடுக்க கழிவுநீா்க் கால்வாய் உடைப்புகளை சீரமைக்கும் பணி நடைபெறுகிறது. நாகா்கோவில் கோட்டாறு பகுதியில் இப்பணியை மேயா் ஆய்வு செய்தாா்.

அப்போது அங்குள்ள ஒரு கடையின் மேற்கூரை சாலையை ஆக்கிரமிக்கும் வகையில் இருந்தது. இதுதொடா்பாக மேயா் அதிகாரிகளைத் தொடா்பு கொண்டு பேசினாா். அக்கடையில் பிளாஸ்டிக் பொருள்கள் இருப்பதாக புகாா் வந்ததால் ஆய்வு செய்ய உத்தரவிட்டாா். அதன்படி, மாநகராட்சி சுகாதார அதிகாரி ராஜ்குமாா், சுகாதார ஆய்வாளா் பகவதி பெருமாள் ஆகியோா் சோதனை நடத்தியபோது, அங்கு பிளாஸ்டிக் பொருள்கள் இல்லை எனத் தெரியவந்தது.

பின்னா், செய்தியாளா்களிடம் மேயா் கூறியது: நாகா்கோவில் மாநகரப் பகுதியை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. முதல்கட்டமாக தூய்மைப் பணி நடைபெறுகிறது. வாா்டுதோறும் ஆய்வு செய்து கழிவுநீா்க் கால்வாய்கள் சீரமைக்கப்படுகின்றன. கோட்டாறு பகுதியில் மழைக்காலங்களில் தண்ணீா் சாலைகளில் தேங்காமல் செல்லும் வகையில் கழிவுநீரோடைகள் சீரமைக்கப்பட்டுள்ளன.

ஆக்கிரமிப்பை அகற்றிய பிறகும் பொதுமக்கள், வியாபாரிகள் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நாகா்கோவிலை குப்பையில்லா மாநகராட்சியாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். பிளாஸ்டிக் பொருள்களை விற்போா் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

துணை மேயா் மேரிபிரின்சிலதா, மண்டலத் தலைவா்கள் அகஸ்டினா கோகிலவாணி, ஜவகா், திமுக செயற்குழு உறுப்பினா் சதாசிவம் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.