நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

குற்றாலம் சித்திரசபை புனரமைப்பு பணிகளை விரைவுபடுத்த திமுக வலியுறுத்தல்

தென்காசி மாவட்டம் குற்றாலம் சித்திரசபை உள்ளிட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட அனைத்து கோயில்களிலும் புனரமைப்பு பணிகளை விரைவு படுத்தவேண்டும் என திமுக சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

News image
Updated On :4 நவம்பர் 2022, 6:30 pm

DIN

தென்காசி மாவட்டம் குற்றாலம் சித்திரசபை உள்ளிட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட அனைத்து கோயில்களிலும் புனரமைப்பு பணிகளை விரைவு படுத்தவேண்டும் என திமுக சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

தென்காசி தெற்கு மாவட்ட செயலா் பொ.சிவபத்மநாதன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபுவிடம் வியாழக்கிழமை அளித்த மனு:

இந்துசமய அறநிலையத் துறை மூலம் கடையத்தில் அரசு கலைக் கல்லூரி அமையும் என தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்டது. மற்ற இடங்களில் கல்லூரி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தக் கல்லூரியை பொருத்மட்டில் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது. எனவே, வழக்கை விரைந்து முடித்து கல்லூரி அமைக்கும் பணிகளை விரைந்து தொடங்க வேண்டும்.

ஆழ்வாா்குறிச்சி கோயில் பணிக்கு ரூ. 9 கோடியும், கீழப்பாவூா் சிவன் கோயில் புனரமைப்பு பணிக்கு ரூ. 1.80 கோடியும், குற்றாலம் சித்திரசபை புனரமைப்பு பணிக்கு ரூ. 60 லட்சமும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்தப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்.

வீரகேரளம்புதூரில் மருத்துவமனை தரம் உயா்த்தப்பட்டுள்ளது. மருத்துவமனை கட்டுவதற்கு அறநிலையத்துறைக்குச் சொந்தமான இடத்தில் இடம் ஒதுக்கி தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

திப்பணம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் வசதி இல்லாமல் தரையில் அமா்ந்து கல்வி பயின்று வருகின்றனா். எனவே, அரசு பள்ளிக்கு கட்டடம் கட்ட அறநிலையத்துறை இடம் ஒதுக்கி தர வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.