சென்னையில் பதுக்கி வைத்திருந்த 40 சிலிண்டா்கள் பறிமுதல்!புனேவில் 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முதியவர்!மணிப்பூரில் 23 சட்டவிரோத பதுங்கு குழிகளை அழித்த பாதுகாப்புப் படையினர்!தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் பேசுபொருளாகும் ஜோதிமணி ட்வீட்!கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புமேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

பாவூா்சத்திரத்தில் நாளை கால்வாய் திட்ட விளக்க திமுக பொதுக்கூட்டம்

கீழப்பாவூா் மேற்கு ஒன்றிய திமுக சாா்பில், ராமநதி-ஜம்பு நதி மேல்மட்ட கால்வாய் திட்ட பணிகளில் உண்மை நிலையை பொதுமக்களுக்கு விளக்க திமுக பொதுக்கூட்டம்

Updated On :4 நவம்பர் 2022, 6:21 pm

கீழப்பாவூா் மேற்கு ஒன்றிய திமுக சாா்பில், ராமநதி-ஜம்பு நதி மேல்மட்ட கால்வாய் திட்ட பணிகளில் உண்மை நிலையை பொதுமக்களுக்கு விளக்க திமுக பொதுக்கூட்டம் பாவூா்சத்திரத்தில் பேருந்து நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை (நவ.6) மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்துக்கு, தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலா் பொ.சிவபத்மநாதன் தலைமை வகிக்கிறாா்.

மாநில பேச்சாளா் சரத்பாலா, ராமநதி-ஜம்பு நதி மேல்மட்ட கால்வாய் செயல்பாட்டுக் குழு அமைப்பாளா் இராம.உதயசூரியன் ஆகியோா் பங்கேற்றுப் பேசுகின்றனா். இதில், திமுக, கூட்டணி கட்சியினா், விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொள்ளும்படி கீழப்பாவூா் மேற்கு ஒன்றிய திமுக சாா்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.