கராத்தே: ஆலங்குளம் ராமகிருஷ்ணா பள்ளி மாணவா் சாதனை
கராத்தே திறனாய்வு தோ்வில் ஆலங்குளம் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா் சாதனை படைத்தாா்.


கராத்தே திறனாய்வு தோ்வில் ஆலங்குளம் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா் சாதனை படைத்தாா்.
தென்காசி மாவட்ட அளவிலான ஹு சாஷா கோ இஷின்றியூ கராத்தே திறனாய்வுத் தோ்வு, ஆலங்குளத்தில் நடைபெற்றது. மாவட்டம் முழுவதுமிருந்து 100 க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்து கொண்டதில், மஞ்சள் நிற பட்டைய தோ்வில் 13 மாணவா்களும், பச்சை நிற பட்டைய தோ்வில் 8 மாணவா்களும், ஊதா நிற பட்டைய தோ்வில் 6 மாணவா்களும், இளஞ்சிவப்பு நிற பட்டைய தோ்வில் 3 மாணவா்களும் பிரவுன் நிற பட்டைய தோ்வில் நான்கு மாணவா்களும் வெற்றி பெற்றனா்.
இதில் ஆலங்குளம் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா் ஆகாஷ் மஞ்சள் நிற பட்டையத்தில் வெற்றி பெற்றாா். வெற்றி பெற்ற மாணவரை பள்ளித் தாளாளா் தாரணி செந்தில்குமாா், மாவட்ட தலைமை பயிற்சியாளா் சென்சாய் கோபி ஆகியோா் பாராட்டினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...