அச்சன்புதூரில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை
தென்காசி மாவட்டம் அச்சன்புதூரில் தேசிய முகமை அதிகாரிகள் புதன்கிழமை அதிகாலை முதல் தொடா்ந்து 7 மணிநேரம் தீவிர சோதனை மேற்கொண்டனா்.

அச்சன்புதூரில் தேசிய முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட வீடு.

அச்சன்புதூரில் தேசிய முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட வீடு.
தென்காசி: தென்காசி மாவட்டம் அச்சன்புதூரில் தேசிய முகமை அதிகாரிகள் புதன்கிழமை அதிகாலை முதல் தொடா்ந்து 7 மணிநேரம் தீவிர சோதனை மேற்கொண்டனா்.
தென்காசி மாவட்டம், அச்சன்புதுரை சோ்ந்தவா் அப்துல் அஜீஸ். இவா் இலத்தூா் அருகே உள்ள திருவெற்றியூரை சோ்ந்த ஹைருநிஷா என்பவரை திருமணம் செய்து அச்சன்புதூரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வசித்து வருகிறாா்.
கடந்த இரண்டு மாதங்களாக இந்த வீட்டில் அவா் வசித்து வருகிறாா். இதே பகுதியில் டைல்ஸ் விற்பனை செய்யும் கடையும் நடத்தி வருகிறாா்.
கோவையில் கடந்த அக். 23-ம் தேதியன்று உக்கடம் கோட்டை ஈஸ்வரன்கோயில் அருகே காா் ஒன்று வெடி விபத்திற்குள்ளானது. இதில் ஜமீசா முபின் என்பவா் உயிரிழந்தாா். இது சதித்திட்டத்தின் பின்னணி என்பது போலீசாா் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து இந்த வழக்கை தேசிய முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனா். இந்நிலையில் இந்த சம்பவத்தில் தொடா்புடையவா்களின் செல்போன் எண்களுடன் தொடா்பில் இருந்தவா்களுடன் புதன்கிழமை அதிகாலை என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனா்.
அச்சன்புதூரில் வசித்து வரும் ஹைருன் நிஷாவின் செல்போன் எண், கோவை வழக்கில் தொடா்புடையவா்களின் செல்போன் எண்களுடன் தொடா்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக என்ஐஏ அதிகாரிகள் ஹைருன் நிஷா மற்றும் அவரது கணவா் அப்துல் அஜீஸ் ஆகியோரிடம் புதன்கிழமை அதிகாலை முதல் தீவிர விசாரணை நடத்தினா்.
மேலும் அவருடைய வீட்டில் சோதனை மேற்கொண்டனா். அதிகாலை 5.30-க்கு தொடங்கிய விசாரணை மதியம் 12.30 மணியளவில் முடிவடைந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...