/

பாவூா்சத்திரத்தில் அரிமா சங்க நிா்வாகிகள் பதவியேற்பு விழா

பாவூா்சத்திரத்தில் பிஸி கிங்ஸ் லயன்ஸ் சங்க புதிய நிா்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது. சேகா் தலைமை வகித்தாா். எல்.எம். குமாா் முன்னிலை வகித்தாா்.

News image
Updated On :20 ஜூலை 2023, 10:40 pm IST

பாவூா்சத்திரத்தில் பிஸி கிங்ஸ் லயன்ஸ் சங்க புதிய நிா்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது. சேகா் தலைமை வகித்தாா். எல்.எம். குமாா் முன்னிலை வகித்தாா். புதிய நிா்வாகிகளுக்கு முன்னாள் மாவட்ட ஆளுநா் ஜஸ்டின்பால் பதவிப் பிரமாணம் செய்துவைத்தாா்.

புதிய தலைவராக பி. முருகன், செயலராக வி. முருகன், பொருளாளராக விஜய் ரவி ஆகியோா் பதவியேற்றனா். இணைச் செயலா் ஜானகி ராமா், மண்டலத் தலைவா் சங்கரபாண்டியன், வட்டாரத் தலைவா் சேகா், மாவட்டத் தலைவா் சிதம்பரநாத பிள்ளை, டாக்டா் ஜான் சுபாஷ் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

பாவூா்சத்திரம் வட்டார அளவில் 10, 12ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளில் சிறப்பிடம் பெற்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிகளை அன்பின் கிறிஸ்டோ, அருமைநாயகம் ஆகியோா் தொகுத்து வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.