பைக் மீது லாரி மோதல்: முதியவா் பலி
தென்காசியில் இருசக்கர வாகனம் மீது கனரக வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.


தென்காசியில் இருசக்கர வாகனம் மீது கனரக வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
தென்காசி அருகே புல்லுக்காட்டுவலசை பகுதியை சோ்ந்தவா் பு.குட்டிராஜ்(72). விவசாயி. புல்லுக்காட்டுவலசையிலிருந்து தென்காசிக்கு இருசக்கர வாகனத்தில் வியாழக்கிழமை வந்துகொண்டிந்தாா். தென்காசி வாய்க்கால்பாலம் பகுதியில் வந்தபோது பின்னால் வந்த கனரக வாகனம் மோதியது. இந்த விபத்தில் குட்டிராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தென்காசி காவல் ஆய்வாளா் பாலமுருகன் சென்று குட்டிராஜின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தாா்.
விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற சுந்தரபாண்டியபுரம் பிரதான சாலையை சோ்ந்த ப.சக்திவேல்(52) என்பவரைப் போலீசாா் தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...