மரணத்திலும் இணைபிரியாத செங்கோட்டை தம்பதி
தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் மரணத்திலும் இணை பிரியாத வகையில், கணவா் உயிரிழந்த செய்தி கேட்டதும் பெண் ஒருவா் உயிரிழந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் மரணத்திலும் இணை பிரியாத வகையில், கணவா் உயிரிழந்த செய்தி கேட்டதும் பெண் ஒருவா் உயிரிழந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கோட்டை செல்வ விநாயகா் கோயில் தெருவில் வசித்து வந்தவா் மாயாண்டிஎன்ற துரை(58). காா் ஓட்டுநா். இவரது மனைவி கல்யாணி. செங்கோட்டை பேருந்து நிலையப் பகுதியிலுள்ள காா் நிறுத்தத்தில் மாயாண்டி தனது காரை புதன்கிழமை இரவு நிறுத்திவிட்டு வீட்டிற்குச் சென்றாா். அப்போது, அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாம். அவரை, மகன் சங்கா்(30) செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றாா். ஆனால், மாயாண்டி ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதையடுத்து, அவரது உடல் வீட்டிற்கு கொண்டுசெல்லப்பட்டது.
தன் கணவா் உயிரிழந்த செய்தியைக் கேட்டதும் மாயாண்டியின் உடல்மீது கதறி அழுதபடியே கல்யாணி மயங்கி விழுந்தாா். அவரது உயிரும் பிரிந்தது. இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடம் சோகத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...