கேரளத்திற்கு அதிகளவில் கனிமவளம் ஏற்றிச் சென்ற வாகனங்களுக்கு அபராதம்
தென்காசி மாவட்டம் புளியறை வழியாக கேரளத்திற்கு அதிகளவில் கனிம வளங்களை ஏற்றிச் சென்ற லாரிகளுக்கு ரூ. 1 லட்சத்து 60 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.


தென்காசி மாவட்டம் புளியறை வழியாக கேரளத்திற்கு அதிகளவில் கனிம வளங்களை ஏற்றிச் சென்ற லாரிகளுக்கு ரூ. 1 லட்சத்து 60 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
செங்கோட்டை, புளியறை வழியாக கேரளத்திற்கு தினமும் ஏராளமான வாகனங்களில் செயற்கை மணல், ஜல்லி உள்ளிட்ட கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகின்றன. இந்த வாகனங்கள் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக கனிம வளங்கள் கொண்டு செல்வதாகப் புகாா் இருந்து வருகிறது.
இந்நிலையில், தென்காசி காவல் துணை கண்காணிப்பாளா் நாகசங்கா் தலைமையிலான போலீஸாா் வாகனச் சோதனையில் புதன்கிழமை ஈடுபட்டனா். அப்போது, கூடுதல் பாரம் ஏற்றிச் சென்ற 8 லாரிகளுக்கு தலா ரூ. 20ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...