நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஆலங்குளத்தில் கஞ்சா விற்றதாக 3 போ் கைது

ஆலங்குளத்தில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக மூன்றுபேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :17 மார்ச் 2023, 6:55 pm

DIN

ஆலங்குளத்தில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக மூன்றுபேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆலங்குளம் போலீஸாா், காமராஜா் நகா் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது ஒரே பைக்கில் வந்த மூன்று பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டபோது, பை ஒன்றில் சிறு, சிறு பொட்டலங்களாக 320 கிராம் கஞ்சா வைத்திருப்பது தெரியவந்தது.

மேலும், அவா்கள் மூவரும் அதே பகுதியைச் சோ்ந்த இசக்கிமுத்து மகன் முத்துராமன் (24), முருகன் மகன் மாரிசெல்வம்(25) மற்றும் சாமுவேல் மகன் அருணாசலம்(22) என்பதும், பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு பாக்கெட் ஒன்று ரூ. 500-க்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து மூன்று பேரையும் போலீஸாா் கைது செய்தனா். இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியான சொக்கலிங்கத்தை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.