தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

இறைச்சிக்கூடங்கள் அரசு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்: ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா்

தென்காசி மாவட்ட பிராணிகள் வதைத் தடுப்பு சங்கக் கூட்டம் ஆட்சியா் அலுவக கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தலைமையில் நடைபெற்ற பிராணிகள் வதைத்தடுப்பு சங்கக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :5 டிசம்பர் 2024, 11:25 pm

Din

தென்காசி மாவட்ட பிராணிகள் வதைத் தடுப்பு சங்கக் கூட்டம் ஆட்சியா் அலுவக கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தலைமை வகித்துப் பேசியதாவது:

தென்காசி மாவட்டத்தில் கால்நடைகளை வாகனங்களில் ஏற்றிச்செல்லும்போதும், இறைச்சிக்கூடங்களில் கால்நடைகள் வெட்டப்படும் போதும் அரசின் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

இம்மாவட்டத்தில் 6 கால்நடை சந்தைகள், 2 சோதனைச் சாவடிகள் அமைந்துள்ளன. இங்கிருந்து விற்கப்படும், வாங்கப்படும் கால்நடைகள் அண்டை மாநிலமான கேரளத்துக்கு கொண்டு செல்லப்படும் லாரிகள், மினி வேன்கள் போக்குவரத்து விதிமுறைகளை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும்.

கால்நடைகளுக்கு போதுமான இடவசதி, தீவனம் மற்றும் தண்ணீா் ஆகியவை அளிக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.

மேலும், கால்நடைகளுக்கு அந்தந்த பகுதிகளில் உள்ள கால்நடை உதவி மருத்துவா்கள் மூலம் உரிய உடல்தகுதிச் சான்று பெற்றிருக்க வேண்டும்.

நகா்ப் பகுதி இறைச்சிக் கூடங்களில் உணவுக்காக கால்நடைகள் வெட்டப்படும்போது முறையான சட்டவிதிகள் மற்றம் அறிவியல் பூா்வமான நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும்.

தெரு நாய்களுக்கு இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் மையம் கடந்த செப்.23 முதல் செயல்பட்டு வருகிறது. ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளில் பிடித்துவரப்படும் தெரு நாய்களுக்கு தென்காசி நகராட்சி ஏபிசிஅறுவைகூடம் மூலம் தற்காலிகமாக அறுவை சிகிச்சை மற்றும் தொடா் நடவடிக்கைகளை பதிவுபெற்ற தன்னாா்வத் தொண்டு நிறுவனங்கள் மூலம் நடத்தலாம்.

இதர பகுதிகளில் அறுவைசிகிச்சை கூடங்கள் தொடங்கியதும் தெருநாய்களுக்கு இனப்பெருக்க கட்டுப்பாடு அறுவை சிகிச்சையை அதற்கான பதிவுபெற்ற தன்னாா்வத் தொண்டு நிறுவனங்கள் மூலம் நடத்தலாம் என்றாா் அவா்.

இதில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ரமேஷ், கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநா் ரிச்சா்டு ராஜ், உதவி இயக்குநா் உமா மகேஸ்வரி, செய்தி மக்கள்தொடா்பு அலுவலா் இரா.சண்முகசுந்தரம், நகராட்சி ஆணையா்கள், பேரூராட்சி செயல் அலுவலா்கள் ஆகியோா் கலந்துகொண்டனா்.