ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

வீ.கே.புதூா் கோயில் திருப்பணி: எம்எல்ஏ வேண்டுகோள்

வீ.கே.புதூா் கோயில் திருப்பணி

News image
Updated On :12 டிசம்பர் 2024, 11:22 pm

Din

தென்காசி மாவட்டம், வீ.கே.புதூா் ஸ்ரீ நவநீத கிருஷ்ணசுவாமி கோயில் திருப்பணியை விரைவில் தொடங்க வேண்டும் என வலியுறுத்தி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் சேகா்பாபுவிடம் சு. பழனி நாடாா் எம்எல்ஏ மனு அளித்துள்ளாா்.

அதன் விவரம்: வீ.கே.புதூரில் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான அருள்மிகு ஸ்ரீ நவநீத கிருஷ்ணசுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் திருப்பணிகள் செய்து குடமுழுக்கு நடத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டிருந்த நிலையில் 2023-24ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் இதன் திருப்பணிக்கு ரூ. 3.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் இதுவரை அதற்கான ஆயத்த பணிகள் எதுவும் நடைபெறவில்லை.

எனவே, கோயில் திருப்பணிகளை உடனே தொடங்க வேண்டும். அடுத்த நிதியாண்டில் மேலும் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.