

தென்காசி கரசேவகா்களுக்கு,அயோத்தி ராமா் கோயில் கும்பாபிஷேக அழைப்பிதழை விஷ்வ ஹிந்து பரிஷத் நிா்வாகிகள் வழங்கினா்.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் வரும் 22 ஆம் தேதி ராமா் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இவ் விழாவில் கலந்து கொள்வதற்கான அழைப்பிதழை ஐந்தருவி ஆசிரம நிா்வாகி சுவாமி அகிலானந்த சுவாமி உள்ளிட்ட கரசேவகா்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில்,விஸ்வ ஹிந்து பரிஷத், தென்காசி மாவட்ட பஜ்ரங்தள் நிா்வாகிகள் சபரி மணி, ராஜவேல், சட்டநாதன், தளவாய் ஆகியோா் கலந்துகொண்டனா். மேலும் ராமா் கோயில் கும்பாபிஷேகம் தினத்தன்று மாலை 6 மணிக்கு வீடுகளில் தீபம் ஏற்றி வழிபாடு நடத்தவும் வலியுறுத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.