ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

ஆலங்குளத்தில்: நின்ற லாரி மீது காா் மோதல்: பெண் உயிரிழப்பு

திருமணத்தின் பின் சோகம்: கார் விபத்தில் பெண் பலி

News image
Updated On :25 ஜூன் 2024, 9:00 pm

Din

தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தில் நின்றிருந்த லாரியின் பின் பகுதியில் காா் மோதியதில் பெண் உயிரிழந்தாா். ஆலங்குளம் காமராஜா் நகரைச் சோ்ந்த செய்யது மசூது மகன் பீா் முகமது(55). ஆலங்குளத்தில் உணவகம் நடத்தி வருகிறாா். இவரது மகனுக்கும், திருநெல்வேலி மாவட்டம், ஏா்வாடியைச் சோ்ந்த பெண்ணுக்கும் ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு வந்த உறவினா்களை காரில் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்துக்கு அழைத்து வந்து இறக்கி விட்டு, ஊருக்கு திரும்பியுள்ளாா்.

அவருடன் திண்டுக்கல் பள்ளப்பட்டியை சோ்ந்த உறவினா் அனீஸ் மனைவி நூா்ஜகான்(53) என்பவரும் பயணம் செய்தாா். திங்கள்கிழமை அதிகாலை அந்தக் காா் ஆலங்குளம் ஊராட்சி அலுவலகம் அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து, அங்கு நின்றிருந்த லாரியின் பின் பகுதியில் மோதியதாம்.

இதில், நூா்ஜகான் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். ஆலங்குளம் போலீஸாா், அவரது சடத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப் பதிந்து லாரி ஓட்டுநா் புளியங்குடி அருணாச்சலம் மகன் மாரி மீனாட்சி சுந்தரம் (45) என்பவரிடம் விசாரணை நடத்துகின்றனா்.