வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

’மாவட்டம் முழுவதும் 100 நாள் வேலை திட்டத்தை அமல்படுத்த வேண்டும்’

தென்காசி விவசாய தொழிலாளா்களுக்கு 100 நாள் வேலை வழங்க வேண்டும்

Updated On :25 ஜூன் 2024, 9:01 pm

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் மாவட்டம் முழுவதும் 100 நாள்கள் வேலை வழங்க வேண்டும் என இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடா்பாக அச்சங்கத்தின் மாவட்டச் செயலா் குணசீலன், தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு விவரம்: தென்காசி மாவட்டத்தில் 221 ஊராட்சிகள் உள்ளன. மாவட்டம் முழுவதும் 1 லட்சத்து 63 ஆயிரம் தொழிலாளா்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை செய்து வந்துள்ளனா்.

தற்போது 1லட்சத்தி 5ஆயிரத்து 48 பேருக்கு மட்டுமே வேலை கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் தென்காசி மாவட்டத்தில் உள்ள கிராமப்புற விவசாயத் தொழிலாளா்கள் வேலை இல்லாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, மாவட்டம் முழுவதும் 221 ஊராட்சிகளிலும் அனைருக்கும் வேலை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.