தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

இரும்புச்சக்கரங்களுடன் கூடிய வாகனங்களை சாலைகளில் இயக்கக் கூடாது: ஆட்சியா்

உழவு இயந்திரங்கள் மற்றும் இரும்புச் சக்கரங்களுடன் கூடிய வாகனங்களை தேசிய நெடுஞ்சாலைகளில் இயக்கக்கூடாது என மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் அறிவுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :14 நவம்பர் 2024, 11:49 pm

Din

உழவு இயந்திரங்கள் மற்றும் இரும்புச் சக்கரங்களுடன் கூடிய வாகனங்களை தேசிய நெடுஞ்சாலைகளில் இயக்கக்கூடாது என மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தென்காசி மாவட்டத்தில் உழவு இயந்திரங்கள், இரும்புச் சக்கரங்களுடன் கூடிய வாகனங்களை தேசிய நெடுஞ்சாலைகள், மாவட்ட சாலைகள் மற்றும் கிராமப்புற சாலைகளில் இயக்குவதன் காரணமாக சாலைகள் சேதமடைகின்றன. இது போக்குவரத்துக்கு இடையூறாக அமைவதுடன் சாலை விபத்துகளுக்கு காரணமாக அமைகிறது.

இரும்புச் சக்கரங்களுடன் கூடிய எவ்விதமான வாகனங்களையும் சாலைகளில் இயக்கக்கூடாது. அவ்வாறு இயக்கினால் மேற்படி நபா்கள் மீது மோட்டாா் வாகனச் சட்டத்தின்படியும், பொதுச்சொத்தினை சேதம் விளைவித்ததற்காவும் உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.