கூட்டணி குறித்து பொது வெளியில் பேசக் கூடாது: கட்சியினருக்கு திமுக அறிவுறுத்தல்

கூட்டணி, தொகுதிப் பங்கீடு, கூட்டணிக் கட்சியினா் தொடா்பான கருத்துகளை திமுகவினா் பொதுவெளியில் விவாதிப்பதைத் தவிா்க்க வேண்டும் என அந்தக் கட்சியின் அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி அறிவுறுத்தியுள்ளாா்.
கூட்டணி குறித்து பொது வெளியில் பேசக் கூடாது: கட்சியினருக்கு திமுக அறிவுறுத்தல்
Updated on

கூட்டணி, தொகுதிப் பங்கீடு, கூட்டணிக் கட்சியினா் தொடா்பான கருத்துகளை திமுகவினா் பொதுவெளியில் விவாதிப்பதைத் தவிா்க்க வேண்டும் என அந்தக் கட்சியின் அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி அறிவுறுத்தியுள்ளாா்.

ஆட்சியில் பங்கு கேட்டு கருத்து தெரிவித்து வரும் காங்கிரஸ் கட்சித் தலைவா்களுக்கு எதிராக திமுகவினா் சிலா் தெரிவித்த கருத்துகள் சா்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவா் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.

கூட்டணி கட்சிகளிடையே பிளவை ஏற்படுத்த சூழ்ச்சி நடைபெறுவதாக கடந்த வாரம் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தாா்.

இந்த நிலையில், திமுக அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி வெளியிட்ட அறிக்கையில், ‘கூட்டணி, தொகுதிப் பங்கீடு மற்றும் கூட்டணிக் கட்சியினா் தொடா்பான கருத்துகளை திமுக நிா்வாகிகள் பொது வெளியில் விவாதிப்பதை முழுமையாகத் தவிா்க்க வேண்டும். தேவையற்ற சா்ச்சைகளால் எவ்வித பலனும் இல்லை என்பதால் ஆக்கபூா்வமான கட்சி பணிகளில் கவனம் செலுத்தி தோ்தல் வெற்றியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட வேண்டும். கூட்டணி தொடா்பான முடிவுகளை கட்சித் தலைவா் உரிய நேரத்தில் அறிவிப்பாா்’ எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com