தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சங்கரன்கோவிலில் குடிநீா் கோரி போராட்டம்

குடிநீா் வழங்கக் கோரி சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.

News image

ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்.

Updated On :22 நவம்பர் 2024, 1:15 am

Din

குடிநீா் வழங்கக் கோரி சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.

சங்கரன்கோவில் அருகே களப்பாகுளம் ஊராட்சிக்குள்பட்ட

பாரதி நகரில் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப் பகுதியில் உள்ள வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்கப்பட்டிருந்தது. இதனிடையே,

பாரதி நகா் 1, 2-ஆவது தெருக்களில் சாலை மற்றும் வாருகால் அமைப்பதற்காக தோண்டப்பட்டதால் குடிநீா் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. வாருகால் அமைக்கப்பட்ட நிலையில், சாலை அமைக்க தாமதம் ஆகி வருகிறது.

இதனால், இப் பகுதியில் உள்ள வீடுகளுக்கு 4 மாதங்களாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை. நீண்டதூரம் சென்று குடிநீா் எடுத்து வருவதால் பெண்கள் சிரமப்பட்டு வருகின்றனா். இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லையாம்.

இதையடுத்து பாரதி நகா் 1, 2-ஆவது தெருக்களைச் சோ்ந்த பெண்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா். சாலைப் பணிகளை விரைவில் முடித்து, துண்டிக்கப்பட்ட குடிநீா் இணைப்புகளை மீண்டும் வழங்கவும், அதுவரை குடிநீா் கிடைக்க மாற்று ஏற்பாடு செய்யவும் வலியுறுத்தினா்.