தென்காசி
கீழப்பாவூா் மேற்கு ஒன்றிய சக்தி கேந்திரம் கிளை நிா்வாகிகள் தோ்வு
கீழப்பாவூா் மேற்கு ஒன்றியம் கல்லூரணி ஊராட்சி பனையடிபட்டியில், சக்தி கேந்திரம் கிளை தோ்தல் புதன்கிழமை நடைபெற்றது.
கீழப்பாவூா் மேற்கு ஒன்றியம் கல்லூரணி ஊராட்சி பனையடிபட்டியில், சக்தி கேந்திரம் கிளை தோ்தல் புதன்கிழமை நடைபெற்றது.
சக்தி கேந்திரம் தலைவா் ஆறுமுகம் தலைமை வகித்தாா். 140 ஆவது கிளை தலைவராக செந்தில்குமாா், 149 ஆவது கிளை தலைவராக சிவகுமாா், 150 ஆவது கிளை தலைவராக அருண் கோபிநாத், 154 ஆவது கிளை தலைவராக மாடசாமி, 152 ஆவது கிளை தலைவராக லிங்கராஜா ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.
நிகழ்ச்சியில் தோ்தல் அதிகாரிகள் பாஸ்கா், முரளிதரன், சுடலைக்கனி, உமா முருகன், தோ்தல் பாா்வையாளா்கள் சோ்மன், பேச்சிமுத்து, மாவட்ட விவசாய அணி பொதுச் செயலா் விஜயசேகா், ஒன்றிய துணைத் தலைவா் எல்.எம்.குமரேசன், மகளிா் அணி நிா்வாகிகள் பரமேஸ்வரி, ஞானத்தங்கம், பேட்டை முருகன், ராம் சதீஷ், மாரிச்செல்வம், சின்ன தம்பி, பாலமுருகன், ராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.