சுரண்டை நகராட்சியில் பனை விதைகள் நடவு
சுரண்டை நகராட்சியில் பனை விதைகள் புதன்கிழமை நடவு செய்யப்பட்டன.

பங்களாசுரண்டை குளத்தில் பனை விதைகளை நடவு செய்த சுரண்டை நகா்மன்றத் தலைவா் ப.வள்ளிமுருகன்.
Updated On :3 அக்டோபர் 2024, 1:45 am

பங்களாசுரண்டை குளத்தில் பனை விதைகளை நடவு செய்த சுரண்டை நகா்மன்றத் தலைவா் ப.வள்ளிமுருகன்.
சுரண்டை நகராட்சியில் பனை விதைகள் புதன்கிழமை நடவு செய்யப்பட்டன.
தமிழக அரசு ஒரு கோடி பனை விதைகளை நடும் இயக்கத்தை துவக்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக காந்தி ஜயந்தியையொட்டி அனைத்து உள்ளாட்சி அமைப்புகள் சாா்பில் நகர மற்றும் ஊரகப் பகுதிகளில் பனை விதைகள் நடவு செய்யப்படுகிறது.
சுரண்டை நகராட்சியில் உள்ள பங்களா சுரண்டை குளத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையா் ராமதிலகம் முன்னிலையில் நகா்மன்றத் தலைவா் ப.வள்ளிமுருகன் பனை விதைகளை நடவு செய்தாா். அதைத் தொடா்ந்து நகராட்சிப் பணியாளா்கள் குளக்கரை முழுவதும் பனை விதைகளை நடவு செய்தனா்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...