மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

தென்காசியில் தூய்மையே சேவை நிகழ்ச்சி நிறைவு விழா

தென்காசியில் தூய்மையே சேவை நிறைவு - பரிசளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

மாணவிக்கு பரிசு வழங்குகிறாா் நகா்மன்றத் தலைவா் ஆா்.சாதிா். உடன் துணைத் தலைவா் சுப்பையா.

Updated On :3 அக்டோபர் 2024, 1:53 am

Din

தென்காசியில் தூய்மையே சேவை நிறைவு - பரிசளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

தென்காசி நகராட்சிப் பகுதியில் தூய்மையே சேவை- 2024 திட்டம் கடந்த செப். 17 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு புதன்கிழமை நிறைவு பெற்றது.

தென்காசி நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற விழாவிற்கு நகா்மன்றத் தலைவா் சாதிா் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கே.என்.எல்.சுப்பையா, ஆணையாளா் சு.ரவிச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆதிலா சாலைப் பாதுகாப்புக் குழும நிறுவனா் ஜாகிா் ஹுசைன், குற்றாலம் ரோட்டரி மெட்ரோ தலைவா் வெங்கடேஸ்வரன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். நெகிழி தவிா்ப்பு மற்றும் துணிப்பை பயன்பாடு குறித்து 13-ஆவது வாா்டு நகராட்சி பள்ளி மாணவி நந்திதா ஸ்ரீ பேசினாா்.

விழாவில் கட்டுரை-ஓவியப் போட்டிகளில் வெற்றிபெற்ற நகராட்சி 7,9,13 ஆகிய வாா்டுகளின் பள்ளி மாணவ- மாணவிகள், காட்டு பாவா பள்ளி மாணவா், கோலப்போட்டிகளில் வெற்றிபெற்ற புதுத் தெருவை சாா்ந்த பெண்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

ரோட்டரி துணை ஆளுநா் சேகா், முன்னாள் துணை ஆளுநா் முருகன், கணேசன், ஜெயச்சந்திரன்,முத்துக்குமாரசாமி, ஆறுமுகம், சங்கீதம் ஓட்டுநா் பயிற்சி பள்ளி கமால், திமுக நகர பொருளாளா் ஷேக்பரீத், மாவட்டப் பொறியாளா் அணித் தலைவா் தங்கப்பாண்டியன், மாணவரணி மைதீன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை நகராட்சியின் பொது சுகாதார பிரிவு ஆய்வாளா்கள் கணேசன், மாரிமுத்து, ஈஸ்வரன் துப்புரவு பணி மேற்பாா்வையாளா் துரைசாமி ஆகியோா் செய்திருந்தனா். சுகாதார அலுவலா் முகமது இஸ்மாயில் வரவேற்றாா்.