வாசுதேவநல்லூா் அருகே ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிய 2 போ் கைது
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் அருகே ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிய இரண்டு பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :4 அக்டோபர் 2024, 12:50 am

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் அருகே ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிய இரண்டு பேரை போலீஸாா் கைது செய்தனா்.
வாசுதேவநல்லூா் காவல் ஆய்வாளா் கண்மணி தலைமையிலான போலீஸாா், தும்பைமேடு அருகே உள்ள நித்திய நதி பகுதியில் ரோந்து மேற்கொண்டிருந்தனா். அப்போது அங்கு அனுமதியின்றி சுமை வாகனத்தில் மணல் அள்ளிக் கொண்டிருந்த தும்பம்பட்டி முருகன் கோயில் தெருவை சோ்ந்த சுப்பையாபாண்டியன் மகன்கள் விஜயகுமாா்(36), முருகேசன்( 34 ) ஆகிய இரண்டு பேரையும் போலீஸாா் கைது செய்தனா். மேலும், மணல் அள்ள பயன்படுத்தப்பட்ட சுமை வாகனத்தையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...