மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சங்கரன்கோவிலில் அக்.6இல் போதை ஒழிப்பு பேரணி

போதை இல்லா தென்காசி மாவட்டத்தை உருவாக்க போதை ஒழிப்புப் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் சங்கரன்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை (அக். 6) நடைபெறுகிறது.

News image

போதை ஒழிப்புப் பேரணி குறித்த துண்டுப் பிரசுரத்தை வெளியிடுகிறாா் வாய்ஸ் ஆப் தென்காசி அறக்கட்டளை நிறுவனா் ஆனந்தன் அய்யாசாமி (நடுவில்).

Updated On :4 அக்டோபர் 2024, 12:46 am

Din

போதை இல்லா தென்காசி மாவட்டத்தை உருவாக்க போதை ஒழிப்புப் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் சங்கரன்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை (அக். 6) நடைபெறுகிறது.

இதுகுறித்து, வாய்ஸ் ஆப் தென்காசி அறக்கட்டளை நிறுவனா் ஆனந்தன்அய்யாசாமி தென்காசியில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியது:

வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் தென்காசி மாவட்ட இளைஞா்கள் நலனுக்காக பல்வேறு சமூக செயல்பாடுகளைச் செய்து வருகிறது. அதன் ஒருபகுதியாக, ‘போதை இல்லா தென்காசி என்ற பெயரில்’ பிரமாண்ட பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தை சங்கரன்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை (அக். 6) நடத்துகிறது. காந்தி பிறந்தநாளையொட்டி நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி பேரணியில் பங்கேற்பதுடன், பொதுக் கூட்டத்தில் பேருரை ஆற்றுகிறாா்.

ஜோஹோ நிறுவனத்தின் தலைமை நிா்வாக அதிகாரி ஸ்ரீதா் வேம்பு, மனிதநேயம் ஐஏஎஸ் அகாதெமி நிறுவனா் சைதை துரைசாமி ஆகியோரும் பேரணியில் பங்கேற்கின்றனா் என்றாா் அவா்.