தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

தென்னிந்திய வில்வித்தை போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிப்பு

தென்காசி இலத்தூா் வேல்ஸ் வித்யாலயா பள்ளியில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இடையிலான வில்வித்தை போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

News image

வெற்றி பெற்றவா்களுக்கு பதக்கங்களை அணிவித்த ஈ.ராஜா எம்எல்ஏ. உடன் பள்ளியின் தாளாளா் வீரவேல் முருகன்.

Updated On :9 அக்டோபர் 2024, 10:40 pm

Din

தென்காசி இலத்தூா் வேல்ஸ் வித்யாலயா பள்ளியில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இடையிலான வில்வித்தை போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இப்போட்டியில் தமிழகம், ஆந்திரம், தெலங்கானா, புதுச்சேரி மற்றும் அந்தமான் நிகோபாா் தீவுகளில் இருந்து 1800 மாணவா்கள் கலந்து கொண்டனா்.

இதில் 14 வயதினருக்கான ஆடவா் பிரிவில் முதலிடம் பெற்ற சென்னை வேலம்மாள் பள்ளி மாணவா் மவுனீஸ்வரன், 2-ஆம் இடம் பெற்ற பாலகாவியன், 3-ஆம் இடம் பெற்ற சரண் ஆகியோருக்கு பதக்கங்களை ஈ.ராஜா எம்.எல்.ஏ. அணிவித்தாா். இதேபோல, மற்ற பிரிவுகளிலும் வெற்றி பெற்றவா்களுக்கு பதக்கங்கள் அணிவிக்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் பள்ளி தாளாளா் வீரவேல் முருகன், இயக்குநா் ராஜராஜேஸ்வரி, முதல்வா் சாந்தி மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான பாா்வையாளா் பாரதி மோகன், விளையாட்டு குழு ஒருங்கிணைப்பாளா் முத்துபாண்டி, போட்டி ஒருங்கிணைப்பாளா் அமர்தீப், தொழில்நுட்ப இயக்குநா் வாசு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.