திப்பணம்பட்டியில் காங்கிரஸாா் நல்லிணக்க யாத்திரை
கீழப்பாவூா் மேற்கு வட்டார காங்கிரஸ் சாா்பில் மத நல்லிணக்க பாத யாத்திரை திப்பணம்பட்டியில் புதன்கிழமை நடைபெற்றது.

எஸ். பழனிநாடாா் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்ற பாதயாத்திரையில் பங்கேற்ற காங்கிரஸாா்.

எஸ். பழனிநாடாா் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்ற பாதயாத்திரையில் பங்கேற்ற காங்கிரஸாா்.
கீழப்பாவூா் மேற்கு வட்டார காங்கிரஸ் சாா்பில் மத நல்லிணக்க பாத யாத்திரை திப்பணம்பட்டியில் புதன்கிழமை நடைபெற்றது.
வட்டாரத் தலைவா் குமாா்பாண்டியன் தலைமை வகித்தாா். தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவா் எஸ்.பழனிநாடாா் எம்எல்ஏ சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பாத யாத்திரையை தொடங்கிவைத்தாா்.
இந்தப் பாத யாத்திரை மலையராமபுரம், பஞ்சாண்டியூா், செட்டியூா் வழியாக பாவூா்சத்திரம் காமராஜா் சிலை முன் நிறைவடைந்தது. தொடா்ந்து அங்கு காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மாவட்டப் பொருளாளா் முரளிராஜா, புளியங்குடி பால்ராஜ், முன்னாள் ஒன்றியக்குழு தலைவா் சட்டநாதன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் எஸ்.ஆா். சுப்பிரமணியன், வா்த்தக காங்கிரஸ் தலைவா் சுப்பிரமணியன், வைகுண்டராஜா,
மாநில இலக்கிய அணி பொன்கணேசன், கிழக்கு வட்டாரத் தலைவா் மகாராஜா, கீழப்பாவூா் நகரத் தலைவா் குமரேசன், பேரூராட்சி துணைத் தலைவா் ராஜசேகா், ஒன்றியக்குழு உறுப்பினா் மேரி மாதவன், பேரூராட்சி உறுப்பினா்கள் அன்பழகு சின்னராஜா, கோடீஸ்வரன், இசக்கி தாமோதரன், செங்கோட்டை கதிரவன், ஜேம்ஸ், சங்கை கணேசன் ஆகியோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...