தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தென்காசி நகராட்சியில் அங்கீகரிக்கப்படாத மனைப் பிரிவுகளை வரன்முறைப்படுத்த விண்ணப்பிக்கலாம்

தென்காசி நகராட்சிப் பகுதியில் அங்கீகரிக்கப்படாத மனைப் பிரிவுகளை வரன்முறைப்படுத்த விண்ணப்பிக்கலாம் என ஆணையா் ரவிச்சந்திரன், நகா்மன்றத் தலைவா் ஆா். சாதிா் ஆகியோா் தெரிவித்துள்ளனா்.

News image
Updated On :15 அக்டோபர் 2024, 8:30 pm

Din

தென்காசி நகராட்சிப் பகுதியில் அங்கீகரிக்கப்படாத மனைப் பிரிவுகளை வரன்முறைப்படுத்த விண்ணப்பிக்கலாம் என ஆணையா் ரவிச்சந்திரன், நகா்மன்றத் தலைவா் ஆா். சாதிா் ஆகியோா் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தென்காசி நகராட்சிப் பகுதியில் 20.10.2016 அன்று அல்லது முன்னா் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ விற்பனை செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவில் அமையும் விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத மனைகள் மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த அரசானை எண்.66, வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை நாள் : 30.03.2020இல் அனுமதி வழங்கப்பட்டது.

தற்போது மனைகளை வரன்முறைப்படுத்த 30.11.2024 வரை விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்து, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவா்கள் இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பம் பதிவு செய்த பின் கனிமவளத்துறை, வனத் துறை மற்றும் வருவாய் கோட்டாட்சியா் ஆகிய மூன்று துறைகளின் தடையின்மை சான்று பெற்று உதவி இயக்குநா், தென்காசி மாவட்ட நகா் ஊரமைப்பு அலுவலகத்தில் நேரில் சமா்ப்பித்து அனுமதி பெற்றபின் தென்காசி நகராட்சி அலுவலகத்தில் உரிய கட்டணங்கள் செலுத்தி மனைகளை வரன்முறைப்படுத்தி உத்தரவு பெற்றுக்கொள்ளலாம்.

எனவே, இதுவரை தென்காசி நகராட்சிப்பகுதியில் வரன்முறை செய்யப்படாத அனுமதியற்ற மனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறை செய்துகொள்ள இது இறுதி வாய்ப்பாக அமைவதால் அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவில் மனைகள் வைத்துள்ள பொதுமக்கள் இந்த வாய்ப்பை தவறாது பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.