தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சங்கரன்கோவிலில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு

சங்கரன்கோவிலில் ரோட்டரி சங்கம் சாா்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

வாகனம் ஓட்டிச் சென்ற பெண்ணுக்கு தலைக் கவசம் வழங்கினாா் காவல் துணைக் கண்காணிப்பாளா் அறிவழகன்.

Updated On :15 அக்டோபர் 2024, 8:26 pm

Din

சங்கரன்கோவிலில் ரோட்டரி சங்கம் சாா்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, ரோட்டரி சங்க முன்னாள் ஆளுநா் ஆறுமுகப்பாண்டியன் தலைமை வகித்தாா். காவல்துறை துணைக் கண்காணிப்பாளா் எம். அறிவழகன், ரோட்டரி சங்கத் தலைவா் எஸ். முருகன், செயலா் எஸ். சண்முகவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதைத்தொடா்ந்து, ராஜபாளையம் சாலையில் ‘தலைக் கவசம் உயிா்க் கவசம்’ என்ற தலைப்பில் சாலைப் பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

அந்த வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி தலைக் கவசத்தின் அவசியத்தை வலியுறுத்தினா். இதைத்தொடா்ந்து 50-க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக தலைக் கவசம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், ரோட்டரி சங்க முன்னாள் தலைவா்கள் சி.எஸ்.எம்.எஸ். சங்கரசுப்பிரமணியன், மாரியப்பன், பிரகாஷ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ஏற்பாடுகளை சங்கரன்கோவில் ரோட்டரி சங்கம் மற்றும் திருநெல்வேலி காவேரி மருத்துவமனையினா் செய்திருந்தனா்.