தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

இலவசமாக வனசோள விதைகள், வேலிமசால் விதைகள்

தென்காசி மாவட்டத்தில் விவசாயிகளின் நிலங்களில் சாகுபடி செய்ய வன சோளவிதைகள் மற்றும் வேலிமசால் விதைகள் இலவசமாக வழங்கப்பட உள்ளது என மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா்.

News image
Updated On :17 அக்டோபர் 2024, 12:36 am

Din

தென்காசி மாவட்டத்தில் விவசாயிகளின் நிலங்களில் சாகுபடி செய்ய வன சோளவிதைகள் மற்றும் வேலிமசால் விதைகள் இலவசமாக வழங்கப்பட உள்ளது என மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா்.

இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தென்காசி மாவட்டத்தில் இறவையில் தீவன சோளம் மற்றும் வேலிமசால் வளா்த்தல் திட்டத்தின்கீழ் 30 ஏக்கரில் நீா்பாசன வசதியுள்ள விவசாயிகளின் நிலங்களில் சாகுபடி செய்ய குறைந்தபட்சம் ஒரு நபருக்கு 0.25 ஏக்கா் பசுந்தீவனம் வளா்க்க தேவைப்படும் 0.375 கிலோ தீவன சோளவிதைகள் மற்றும் 0.5 கிலோ வேலிமசால் விதைகள் இலவசமாக வழங்கப்பட உள்ளது.

இத்திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்பும் பயனாளி குறைந்தபட்சம் 2 கால்நடைகள் வைத்திருக்க வேண்டும். நீா்பாசன வசதியுள்ள நிலம் குறைந்தபட்சம் 0.25 ஏக்கா் ( 25 சென்ட்) நிலம் வைத்திருக்க வேண்டும். அந்நிலத்தில் மூன்று ஆண்டுகளுக்கு பயிா்சாகுடி செய்து பராமரிக்க விருப்பம் தெரிவிக்கவேண்டும்.

குத்தகை நிலம் வைத்திருக்கும் விவசாயி குறைந்தது மூன்று வருடங்களுக்காவது குத்தகை ஒப்பந்த பத்திரம் வைத்திருக்க வேண்டும்.

அந்நிலத்தில் மூன்று ஆண்டுகளுக்கு பயிா்சாகுபடி செய்து பராமரிக்க விருப்பம் தெரிவிக்கவேண்டும். இத்திட்டத்தின்கீழ் அதிக கால்நடைகள் வைத்திருக்கும் விவசாயிகள்அதிகபட்சமாக ஒரு ஏக்கா் வரை பயிரிடலாம்.

சிறு குறு விவசாயிகள் , தாழ்த்தப்பட்டோா் மற்றும் பழங்குடியினருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

பயனாளிகள் கடந்த மூன்று வருடங்களில் இம்மாதிரியான திட்டங்களில் பயனடைந்திருக்க கூடாது.

மானாவாரியில்...

மானாவரியில் தீவன சோளம் மற்றும் காராமணி வளா்த்தல் திட்டத்தின்கீழ் 70 ஏக்கரில் நீா்பாசன வசதியற்ற விவசாயிகளின் நிலங்களில் சாகுபடி செய்ய குறைந்தபட்சம் ஒருநபருக்கு 0.50 ஏக்கா் ( 50 சென்ட்) பசுந்தீவனம் வளா்க்க தேவைப்படும் 6 கிலோ தீவன சோள விதைகள் மற்றும் 2 கிலோ காராமணி விதைகள் இலவசமாக வழங்கப்பட உள்ளது.

நீா்பாசன வசதியற்ற நிலம் குறைந்தபட்சம் 0.5 ஏக்கா் (50சென்ட்) நிலம் மற்றும் கால்நடைகள் வைத்திருக்க வேண்டும், அந்நிலத்தில் மானாவாரி முறையில் பயிா்கள் சாகுபடி செய்ய விருப்பம் தெரிவிக்கவேண்டும்.

இத்திட்டத்தின்கீழ் அதிக கால்நடைகள் வைத்திருக்கும் விவசாயிகள் அதிகபட்சமாக ஒரு ஹெக்டோ் வரை பயிரிடலாம். சிறு குறு விவசாயிகள் தாழ்த்தப்பட்டோா் மற்றும் பழங்குடியினருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

மின்சார வசதியுடன் கூடிய இயந்திர புல் நறுக்கும் கருவி திட்டத்தின் கீழ் தென்காசி மாவட்டத்திற்கு 30 பயனாளிகளுக்கு இயந்திர புல் நறுக்கும் கருவி வழங்க குறியீடு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்படி ஒரு அலகிற்கான இயந்திர புல்நறுக்கும் கருவி ரூ.32,ஆயிரமாகும்.

இதில், அரசு 50சத மானியம் ரூ.16ஆயிரம் அதிகபட்சமாக வழங்கப்படும். மீதித் தொகை பயனாளியின் பங்களிப்பாகும்.

பயனாளிகள் குறைந்தபட்சம் இரண்டு கால்நடை கள் மற்றும் பயிா்கள்சாகுபடி செய்ய மின்சார வசதியுடன் கூடிய நிலப்பரப்பு 0.5 ஏக்கா் வைத்திருக்க வேண்டும்.

சிறுகுறு விவசாயிகள் , பெண் விவசாயிகள் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் வகுப்பினருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

தோ்வு செய்யப்படும் பயனாளிகள் 50 சத (சரக்கு மற்றும் சேவை வரி சோ்த்து பங்குத்தொகையை செலுத்துவதற்கு தயாா் நிலையில் இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரா்கள் சம்பந்தப்பட்ட கால்நடை மருந்தக கால்நடை உதவி

மருத்துவரிடம் விண்ணப்பங்களை சமா்ப்பிக்க வேண்டும்.

மேலும், விவரங்களுக்கு மண்டல இணை இயக்குநா் (மு.கூ.பொ) கால்நடை பராமரிப்புத் துறை, திருநெல்வேலி என்ற முகவரியில் தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என்றாா்அவா்.