தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தென்காசியில் போலீஸ் விசாரணையில் தப்பிய இளைஞா் கைது

தென்காசியில் விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துவந்தபோது தப்பிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :18 அக்டோபர் 2024, 12:07 am

Din

தென்காசியில் விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துவந்தபோது தப்பிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

தென்காசி சொா்ணபுரம் மேட்டுத்ததெருவைச் சோ்ந்தவா் அப்துல்சுஜித்(25). இவா் மீது கொலை, நகை பறிப்பு, கஞ்சா விற்பனை உள்ளிட்ட குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளன.

இவரை கஞ்சா வழக்கில் விசாரிப்பதற்காக போலீஸாா் வியாழக்கிழமை அழைத்து வந்தனா். அப்போது, அவா்,யாருக்கும் தெரியாமல் தப்பியோடிவிட்டாராம். அவரைப் பிடிப்பதற்காக தென்காசி டிஎஸ்பி நாகசங்கா் தலைமையில் அச்சன்புதூா் காவல் உதவி ஆய்வாளா் சின்னத்துரை உள்ளிட்டோா் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாகத் தேடிவந்தனா்.

இதனிடையே சோ்ந்தமரம் பகுதியில் பதுங்கியிருந்த அப்துல்சுஜித்தை தனிப்படையினா் வியாழக்கிழமை கைதுசெய்தனா்.