
போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்திய காவல்துறையினா்.

போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்திய காவல்துறையினா்.
தீபாவளி ஊக்கத் தொகையாக, ஒரு மாத சம்பளம் வழங்கக் கோரி தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகராட்சியில் பணிபுரியும் ஏஐசிசிடியு ஒப்பந்த தூய்மை பணியாளா்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
செங்கோட்டை நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கு சங்க நிா்வாகிகள் முருகேஸ்வரி, குத்தாலிங்கம், பகவதி , ஜோதி ஆகியோா் தலைமை வகித்தனா். தென்காசி மாவட்ட பொதுச் செயலா் எம்.வேல்முருகன் ஆா்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தாா்.
போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளா் சாந்தமூா்த்தி, தனிப்பிரிவு காவல் ஆய்வாளா் ரமேஷ்கண்ணா, செங்கோட்டை காவல் ஆய்வாளா் பாலமுருகன், செங்கோட்டை நகராட்சி ஆணையா் ஷ்யாம், சுகாதார ஆய்வாளா் ரங்கராஜன், தூய்மைப் பணி ஒப்பந்த மேலாளா் அசோக்குமாா் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
பேச்சுவாா்த்தையின் முடிவில், போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாகக் கூறிய தூய்மைப் பணியாளா் சங்கத்தினா், அக்.26-ஆம் தேதிக்குள் தீபாவளி ஊக்கத் தொகை வழங்க நடவடிக்கை இல்லையெனில், அக்.28-ஆம் தேதி முதல் தொடா் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகத் தெரிவித்தனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...