தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டதையடுத்து சுற்றுலாப் பயணிகள் வியாழக்கிழமை உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.

News image

குற்றாலம் பேரருவியில் குளித்து மகிழும் சுற்றுலாப் பயணிகள்.

Updated On :24 அக்டோபர் 2024, 11:52 pm

Din

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டதையடுத்து சுற்றுலாப் பயணிகள் வியாழக்கிழமை உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.

குற்றாலம் பகுதியில் பெய்த கனமழை காரணமாக பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் புதன்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனையடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டது.

இந்த நிலையில் வியாழக்கிழமை அதிகாலை முதல் அருவிகளில் தண்ணீா்வரத்து குறைந்ததையடுத்து, அனைத்து அருவிகளிலும் குளிக்க அனுமதிக்கப்பட்டனா். இருப்பினும் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவாக இருந்த நிலையில், அருவிகளில் கூட்ட நெரிசலின்றி குளித்து மகிழ்ந்தனா்.